கோலிவுட்டில் புதுமைகள் நிகழ்த்தவிருக்கும் நயன்தாரா

கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு இனையாக பேரும் புகழும் கொண்ட நாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான ‘அறம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கோபி நயினார், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபகாலமாகவே நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வெளியான படங்களில் மற்ற்றொரு சூப்பர் ஹிட் படமான ‘மாயா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கும் முயற்சி நடைப்பெற்று வருகிறது. இந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் அஸ்வின் சரவணன் முடித்து விட்டதாகவும் விரைவில் அவர் நயன்தாராவுடன் அந்த கதை குறித்து பேசி ஒப்புதல் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களும் இன்னும் ஒரு சில நாட்களில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் கோலிவுட்டில் ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள் 2ஆம் பாகம் வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close